ஜனவரி 21 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 21, 2015, 05:24 PM

இன்றைய (21-01-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு முழு மன்னிப்பு அளிக்கப்பட்டிருப்பது மற்றும் இலங்கை தலைமை நீதிபதி பதவி விலக ஒப்புக்கொண்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கை ஜனாதிபதியை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று சந்தித்து பேசியிருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வேலை கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருப்பது குறித்த செய்தி;

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துவருவதாகவும், இப்போது மக்கள் பிறப்பு-இறப்பு விகிதங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால், இது மாநிலத்தில் ஒரு மக்கள் தொகை நெருக்கடியை உருவாக்கியிருப்பதாகவும், இதனால் சிறிய குடும்பம் போதும் என்ற குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்றும், ஆந்திரமக்கள் மேலும் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்; இசையமைப்பாளர் இளையராஜா ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்த சாதனைக்காக அவருக்கு மும்பையில் ஒரு பாராட்டு விழா நடந்திருப்பது குறித்த செய்தி;

இன்றைய பலகணியில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்திருக்கும் நிலையை மாற்றும் நோக்கில் உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரிக்க எடுத்த முயற்சி வெற்றிபெறுமா என்பதை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.