"புண்படாமல் சிரிக்கவைத்த கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண்"
Share
Subscribe
இந்தியாவின் பிரபல கேலிச்சித்திர இதழியலாளர் ஆர்.கே.லக்ஷ்மண் இன்று காலமானார். பல தசாப்தங்கள் இந்தியாவின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் தனது கேலிச்சித்திரங்கள் மூலம் இந்திய அரசியல், பொதுவாழ்வின் பிற அம்சங்கள் போன்றவற்றைப் பற்றி மக்களின் முன்வைத்தவர் , சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தவர் என்று அவர் பாராட்டப்படுகிறார். இவரது கேலிச்சித்திரங்கள் பிறர் மனது புண்படாத வகையில் இருந்தன, கண்ணியமான அவமதிப்பை, கண்ணியமான கேலியைக் கைக்கொண்டிருந்தவர் அவர் என்கிறார் இந்து நாளிதழின் கேலிச்சித்திரக்காரர் கேஷவ்.
