ஜனவரி 26 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 26, 2015, 05:59 PM

Subscribe

இன்றைய (26-01-2015) பிபிசி தமிழோசையில்

இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் பேசியிருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி அளிக்கப்படும் பத்மா விருதுகள் இந்த முறை மடாதிபதிகள் மற்றும் மதத்தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது குறித்த சர்ச்சை குறித்து ஹிந்து பத்திரிக்கையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராமின் செவ்வி;

இன்று காலமான இந்தியாவின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான ஆர் கே லக்ஷமணனின் கேலிச்சித்திரப் பங்களிப்பு குறித்து ஹிந்து பத்திரிக்கையின் கேலிச்சித்திர ஓவியரான கேஷவின் செவ்வி;

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, அரசுக்குச் சொந்தமான 100 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக விற்கும் முயற்சியுடன் தொடர்புபட்டிருந்ததாக, முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் மனைவி புகார் அளித்துள்ளது குறித்த செய்திகள்;

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அந்த விசாரணைகளை மூடிமறைத்ததாக குற்றம்சாட்டப்படும் மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அதிகாரியான அனுர சேனாநாயக்கவின் மறுப்பு;

இலங்கையில் பல ஆண்டுகளாக காணாமல் போயுள்ளவர்களை கண்டுபிடிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மன்னாரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கை குறித்த செய்தி; இலங்கை கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு அரச துறையில் வேலை வழங்கக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி;

இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டங்களின் 50 ஆவது ஆண்டு நினைவுநாளை ஒட்டிய பெட்டகத்தின் இரண்டாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.