ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரிச்சென்ற 157 பேரின் நிலையென்ன?

Jan 28, 2015, 06:17 PM

Subscribe

ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த ஆஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியானதே என்று ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்திருக்கும் பின்னணியில் இன்றைய தீர்ப்பின் அடுத்தகட்டமாக இந்த 157 பேரின் அகதித்தஞ்சக் கோரிக்கைகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து, ஆஸ்திரேலிய தமிழ்க்காங்கிரஸ் அமைப்பின் அகதிகளுக்கான செயற்பாட்டாளர் பாலவிக்னேஸ்வரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி