மதநிந்தனை தடுப்புச் சட்டங்கள் இலங்கையில் அவசியமா?
Share
Subscribe
மத ரீதியான உணர்வுகளைப் பாதுகாக்கின்ற சட்டங்களை வைத்திருக்கின்ற நாடுகள் அவற்றை ஒழிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்று மத நம்பிக்கைகளைச் சாராத, மனிதநேயத்தை வலியுறுத்துகின்ற அமைப்புகளின் ஒன்றியம் (The International Humanist and Ethical Union அல்லது IHEU) கூறுகின்றது.
சார்லி எப்தோ நையாண்டி கேலிச்சித்திர இதழ் மீதான தாக்குதல்களின் பின்னணியில் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையில் மதநிந்தனைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் என்ற முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.
இலங்கையில் மதநிந்தனைச் சட்டங்கள் அவசியமா என்ற கேள்விக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் யூ. அப்துல் நஜீம் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த விளக்கத்தை நேயர்கள் கேட்கலாம்.
