'வடக்கு- கிழக்குக்கு வெளியே ஒரு தமிழ்க் கூட்டமைப்பு': மனோ கணேசன்
Share
Subscribe
இலங்கையின் தென்பகுதி மற்றும் மலையகத்திலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகி கட்சிகள் இணைந்து இந்த புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் நலன்களையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதைப் போல, வடக்கு- கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை முன்வைத்து தங்களின் கூட்டணி செயற்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
