பிப்ரவரி 1 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 01, 2015, 05:53 PM

Subscribe

இன்றைய (01-02-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் தெற்கு கடலில் பெருந்தொகை ஆயுதங்களுடன் தடுத்துவைக்கப்பட்ட கப்பலை நிர்வகித்துவந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்திடம் பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் குறித்த செய்திகள்;

இலங்கையின் புதிய விமான சேவைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது வழக்கறிஞர் தொழிலில் முழுக்கவனம் செலுத்தவுள்ளதாகவும், அந்தப் பணியில் முழுநேரமாக ஈடுபடுவதற்கு தமது அமைச்சுப் பதவி தடையாக இருக்கும் என்று கருதுவதாகவும் பிபிசியிடம் கூறியுள்ளது குறித்த செய்தி;

வவுனியா சிதம்பரபுரம் முகாமில் இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்துவாழும் குடும்பங்களை அதே இடத்தில் காணிகள் வழங்கி குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதல்வர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் விற்பனையாகும் சிகரட் பெட்டிகளில் படத்துடன் கூடிய இருதய நோய் எச்சரிக்கை வாசகம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் ஒன்பதாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.