பிப்ரவரி 4 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 04, 2015, 04:42 PM

Subscribe

இன்றைய (04-02-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிந்த பிறகும் கூட நாட்டின் வடக்கு மற்றும் தென்பகுதி மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்க முடியவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று நடந்த இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கலந்துகொண்டது ஏன் என்பது குறித்து அவரது செவ்வி;

சம்பந்தர் கலந்துகொண்டது தனிப்பட்ட முறையிலேயே தவிர தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அல்ல என்று கூறும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துக்கள்;

இந்த சர்ச்சை குறித்து இலங்கை தமிழர்களின் கருத்துக்கள்;

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு செல்லும் தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் போக்கு புதிய ஆட்சியிலும் தொடருவதாக புகார்கள் எழுந்துள்ளது குறித்த செய்தி;

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையைச் சேர்ந்த மருத்துவமனையில் இளம் சிறாருக்கான அபூர்வ இருதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டதாக மருத்துவ மனை ஒன்று தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இன்றைய பலகணியில் பர்மாவில் இந்த ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அந்நாடு கடந்து வந்துள்ள ஜனநாயகப் பாதை குறித்தும் கடக்க வேண்டிய சவால்கள் குறித்தும் பிபிசியின் பர்மிய சேவையின் Ko Ko Aung தயாரித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.