பிப்ரவரி 9 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (09-02-2015) பிபிசி தமிழோசையில்
ஹெச்.எஸ்.பி.சி.யின் துணை நிறுவனமான சுவிஸ் வங்கி ஒன்று, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தமது வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட உதவியதாக தெரியவந்துள்ளது குறித்த செய்திகள்;
இது தொடர்புடைய இந்திய கருப்புப்பணத்தை மீட்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து முன்னாள் வருமான வரித் துறை ஆணையர் டிசிஏ ராமானுஜனின் ஆய்வுக்கண்ணோட்டம்;
இலங்கையின் உயர்மட்ட ஊழலை விசாரிக்க ஜனாதிபதியின் சிறப்பு ஆணைக்குழுவை நியமிக்கப்போவதாக இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிரிசேன அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென அவரது கூட்டணிக் கட்சிகள் சில கோரிக்கை விடுத்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி நீதிமன்றங்களின் வாயிலாக சட்டத்தின் பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம் என்று இலங்கையின் புதிய தலைமை நிதிபதி கே.ஸ்ரீபவன் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
