பிப்ரவரி 15 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-02-2015) பிபிசி தமிழோசையில்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கருத்துரிமை குறித்த விவாதம் ஒன்று நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உணவகம் ஒன்றிலும், பின்னர் யூதர்களின் வழிபாட்டிடம் ஒன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டது குறித்த செய்திகள்;
இந்தியா சென்றுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் இந்தியா என்னவிதமான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்;
தமிழ்நாட்டின் இலங்கை தமிழ் அகதிமுகாம்களில் உள்ள பட்டதாரிகளை மலையக பள்ளிகளின் ஆசிரியராக நியமிக்கக்கோரும் பெருந்தோட்ட அமைச்சர் வேலாயுதத்தின் செவ்வி;
இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பிரதேசத்தில் குடிநீர் மாசடைந்துவருகின்றமை தொடர்பில் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று கவனயீர்ப்பு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது தொடர்பான செய்திகள்;
இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீகிரிய சுவரோவியம் மீது எழுதினார் என்கிற குற்றச்சாட்டின்கீழ் மட்டக்களப்புப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
தமிழக கேரள எல்லையில் இருவரை கொன்ற காட்டுப்புலியை பிடிக்கும் பிரச்சனை சட்டம் ஒழுங்காக மாறியிருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பெண்மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாடு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
