பிப்ரவரி 22 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (22-02-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கை இறுதிப்போரில் விஸ்வமடு அருகில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்கு சமீபத்தில் தெரியவந்திருப்பதாக கூறும் மன்னார் ஆயரின் செவ்வி;
இலங்கை வடக்கிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையே என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்கவேண்டுமெனக் கோரும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் முக்கியஸ்தர் எம்.எம்.அமீனின் செவ்வி;
இலங்கை அரசு கொண்டுவந்திருக்கும் நீதிமன்ற சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் இதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து மனித உரிமை வழக்கறிஞர் கே எஸ் ரத்தினவேலின் செவ்வி;
திருகோணமலையின் சீனன்குடா கருமலையுற்று முஸ்லிம்கள் காணிகள் தொடர்பாக கடைபிடித்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் குறித்த செய்தி;
இனப் படுகொலையால் பெரும் இழப்புக்களை சந்தித்த ருவாண்டா – புதிய தொழில்நுட்பங்கள் வளரும் மையாமாக தன்னை வளர்த்துக் கொள்ள முனைந்துள்ளது குறித்த பெட்டகம்; உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா எளிதாகவும் இலங்கை போராடியும் வெற்றி பெற்றுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.