பிப்ரவரி 23 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (23-02-2015) பிபிசி தமிழோசையில்
மீண்டும் மீண்டும் பயனபடுத்தப்படும் மருந்து ஊசிகள் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுக்களை குறைப்பதற்கான முக்கிய முன்முயற்சியாக ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தானாகவே செயலிழந்துபோகும் ஊசிகளை பயன்படுத்தும் திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு வழங்கியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் புதிய அரசாங்கம் தயங்குகிறதா என்கிற கேள்விக்கு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பதில்கள்;
இலங்கையில் முந்தைய ஆட்சியில் வெள்ளை வேன்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணை செய்யப்படவேண்டும் என்று தன்னிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஆராய்ந்த கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இது தொடர்பான புகார்களை காணாமல் போனோரின் உறவினர்கள் காவல்துறையிடம் பதியும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
கடவுச்சீட்டில் தவறான தகவல்கள் இருந்த புகாரில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி நேற்று கைதுசெய்யப்பட்ட பின்னணியில், இன்று அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருப்பது குறித்த செய்தி;
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இன்று தொடங்கிய இந்திய நாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடருக்கு வராமல், விடுமுறையில் சென்றுவிட்டது சரியா என்பது குறித்து அந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பதில்கள்; ஆப்கானிஸ்தானில் பணி செய்யப்போனபோது கடத்தப்பட்டு நேற்று அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் நேற்று இரவு புதுதில்லி வந்திருக்கும் நிலையில் அவரது இளைய சகோதரர் ஜான் ஜோசப் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.