பிப்ரவரி 25 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 25, 2015, 06:08 PM

Subscribe

இன்றைய (25-02-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கைபோரின் இறுதியில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கும் முடிவை இன்னமும் இலங்கை அரசு எடுக்கவில்லை என்று இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பிபிசிக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

திருகோணமலை மாவட்டம் சம்பூரில் மீள் குடியேற்றம் தடைபட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீண்டும் கையளிப்பது தொடர்பாக ஜனாதிபதி தலைமையிலான தேசிய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது குறித்த செய்தி;

பலமுறை தள்ளிப்போடப்பட்ட முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைத் தேர்தல் 28ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான பிரசாரங்கள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைவது குறித்த செய்தி;

முன்னாள் அமைச்சர் விமல் விரன்ஷவின் மனைவி சஷி வீரவன்சவை தொடர்ந்து சிறையில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;

மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானம் பெற்று செய்யப்படும் அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி நிலைமையை எட்டியுள்ளது குறித்த செய்தி;

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, அகமதாபாத் நகரில் பொதுக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

பாரீஸில் சார்லி எப்தோ தாக்குதல்கள் நடந்த சூழலில், ஆயிரம் பிரிட்டிஷ் முஸ்லிம்களிடம் பிபிசி நடத்தியிருக்கும் புதிய கருத்தெடுப்பு சுற்றாய்வின் முடிவுகள் குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.