மார்ச் 1 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 01, 2015, 05:27 PM

Subscribe

இன்றைய (01-03-2015) பிபிசி தமிழோசையில்

யாழ்ப்பாணத்தில் சமீபத்திய போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் அனந்தி சசிதரன் துணைபோனதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;

தமிழரசு கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரனின் பதில்கள்;

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வை புறக்கணிக்கும் போராட்டத்தை தமிழ் சிவில் சமுக அமையம் முன்னெடுப்பது ஏன் என்பது குறித்து இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் திருகோணமலை மாவட்ட மனித உரிமைகள் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்குமான நிலையத்தின் இயக்குநர் அருட்தந்தை யோகேஸ்வரனின் செவ்வி;

இலங்கைக்கு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் தென்னாபிரிக்கவின் உயர்மட்ட தூதுக்குழுவினருடன் சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் செவ்வி;

இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச ஊடக நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ட்ரான்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

பாகிஸ்தானில் எத்தனைப் பெண்கள் பாலியல் வல்லுறவு கொடுமைக்கு ஆளாகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் காவல்துறையிடமோ குடும்பத்திடமோ முறையிடாத நிலையில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை வெளியில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான பெண்ணொருவர் தற்போது நீதிகேட்டு போராடுவது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.