மார்ச் 4 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 04, 2015, 04:32 PM

Subscribe

இன்றைய (04-03-2015) பிபிசி தமிழோசையில்

இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவு கொலைக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரின் பேட்டி அடங்கிய பிபிசியின் ஆவணப்படக் குழுவினர் அனுமதி பெற்ற விதம் குறித்து விசாரணை செய்யப்போவதாக இந்திய உள்துறை அமைச்சர் அறிவித்திருப்பது குறித்த செய்தி;

புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டுவந்த காவலர்களில் இன்று மேலும் ஒருவர் சரணடைந்துள்ளது குறித்த செய்தி;

பெங்களூரில் வசிக்கும் சேலத்தைச் சேர்ந்த 24வயதான இந்துஜாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் கொடுத்த மணமகன் தேவை என்கிற விளம்பர விவரங்கள் இந்துஜாவுக்கு பிடிக்காத நிலையில் அவரே தனக்கு என்னமாதிரியான மணமகன் தேவை என்றும், தான் எப்படிப்பட்டவர் என்றும் ஒரு வித்தியாசமான மணமகன் தேவை விளம்பரத்தை தயாரித்து தனது வலைப்பூவில் பதிவேற்றியதைத் தொடர்ந்து அந்த விளம்பரம் இணையத்தில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்து இந்துஜாவின் பிரத்யேக பேட்டி;

டில்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் ஆம்ஆத்மி கட்சியின் உள்கட்சி மோதல்கள் விளைவாக அந்த கட்சியின் முக்கிய அரசியல் விவகாரங்களுக்கான குழுவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் நீக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

இலங்கையின் இறுதி கட்டப்போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த உள்நாட்டு விசாரணையை நடத்த அரசு எடுத்துள்ள முடிவை தான் ஆதரிப்பதாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ இன்று காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருப்பது குறித்த செய்தி;

நிறைவாக இன்றைய பலகணியில், மேற்கத்திய பாரம்பரிய இசைவடிவமான சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவை வழிநடத்தும் மியூசிக் கண்டக்டராக வளர்ந்து வரும் முதல் ஆசிய இசைக்கலைஞர் பற்றிய பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.