மார்ச் 5 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 05, 2015, 05:39 PM

Subscribe

இன்றைய (05-03-2015) பிபிசி தமிழோசையில்

இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்துக்கு தடை விதித்த இந்திய அரசு அதை யூடியூபிலும் நீக்கியிருப்பது குறித்த செய்திகள்;

இந்த குறிப்பிட்ட ஆவணப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அது திட்டமிட்டதைவிட முன்கூட்டியே ஒளிபரப்பப்பட்டதன் காரணம் என்ன என்பது குறித்து பிபிசியின் விளக்கம்;

இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கும் இந்த ஆவணப்படத்தை பார்த்த இந்தியாவின் ஆவணப்பட தயாரிப்பாளரும் பெண்ணியவாதியுமான லீனா மணிமேகலையின் செவ்வி;

தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள பின்னணியில் இது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்த செய்திகள்;

ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டுமென்றும், பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்குச் செல்லும்போது ஈழத் தமிழர்களின் முக்கியமான பிரச்சனைகளை இலங்கையின் புதிய அதிபரோடு விவாதித்து முடிவு காண வேண்டுமென்றும் தி.மு.க. கூறியுள்ளது குறித்த செய்தி;

இலங்கையில் தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவந்ததன் பின்னரே புதிய பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது குறித்த செய்தி;

கொழும்பு துறைமுக நகர பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது குறித்த செய்தி;

தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் ஏன் வெள்ளையர்கள் விளையாட்டாகவே தொடர்கிறது என்பது குறித்து பிபிசியின் ஆப்ரிக்கச் செய்தியாளர் ஆண்ட்ரூ ஹார்டிங் தயாரித்து வழங்கும் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.