மார்ச் 6 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 06, 2015, 05:38 PM

Subscribe

இன்றைய (06-03-2015) பிபிசி தமிழோசையில்

ஈராக்கின் மிகப் பழமையான அசிரியன் நகரான நிம்ருத் நகரை கனரக இயந்திரங்களைக் கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் அழிப்பதை ஒரு போர்க்குற்றம் என்று ஐநா மன்றம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்த செய்தி

இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி ஒருவரை அடித்துக் கொன்ற செயல் எதைக்காட்டுகிறது என்று பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் நிறுவனர் ஹென்ரி டிபேனின் ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையில் சீன உதவியுடன் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட துறைமுக நகரம் என்கிற நூற்றைம்பது கோடி டாலர்கள் நில அபிவிருத்தி திட்டத்தை இலங்கை இடைநிறுத்தியுள்ளதை சீன உறுதி செய்துள்ளது என்னவிதமான சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து தினக்குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் வி தனபாலசிங்கத்தின் செவ்வி;

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக அடுத்தவாரம் மார்ச் மாதம் 13 ஆம் தேதி இலங்கைக்கு செல்லும்போது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாருக்கும் செல்வார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது குறித்த செய்தி;

கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதியின் தடுபுக்காவல் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயகுமாரியை விடுதலை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பில் நடந்திருப்பது குறித்த செய்தி;

இலங்கைக்கான நார்வே தூதர் யாழ்ப்பாணத்தில் வடமாகாண முதலமைச்சரை இன்று சந்தித்து பேசியிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.