மார்ச் 8 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 08, 2015, 04:31 PM

Subscribe

இன்றைய (08-03-2015) பிபிசி தமிழோசையில்

தமிழ்நாட்டின் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அந்த நிறுவனத்தின் அலுவலக வாசலில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த செய்திகள்;

தாக்கப்பட்ட ஒளிப்பதிவாளரின் பேட்டி;

இந்த தாக்குதலில் குற்றம் சுமத்தப்படும் இந்து முன்னணி அமைபின் கருத்துக்கள்

இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட பின்னணியில், ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து நிர்மலா ராஜசிங்கத்தின் சிறப்புச் செவ்வி;

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மூன்று நாள் பயணமாக பிரிட்டனுக்கு வந்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையில், விவசாயி ஒருவர் தனது வயல்நிலத்தை தானம் செய்து, தனது கடைசி விளைச்லையும் காட்டு யானைகளுக்கு உணவாக அளிக்க முன்வந்துள்ளது பற்றிய செய்திக் குறிப்பு;

நிறைவாக பொலிவிழக்கும் பொன்னிநதி சிறப்பு பெட்டகத்தொடரின் முதல் பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.