மார்ச் 9 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (09-03-2015) பிபிசி தமிழோசையில்
காமன்வெல்த் அமைப்பின் நிகழ்வுக்காக லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்களிடம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு காரணம் என்னவென்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே- யில் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பொறுப்பாளர் சாம் சுதாவின் செவ்வி;
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமை உண்டு என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க தமிழக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த கருத்தை ஆதரிப்பதாக கூறும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறுவச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளையின் செவ்வி;
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமை உண்டு என்கிற இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் கருத்தை ஆதரிக்கும் இலங்கை வடபகுதி மீனவர் சங்கப்பிரதிநிதியின் செவ்வி;
தஞ்சம் கோரி வருபவர்களை ஆஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐநாவின் சித்ரவதைகளுக்கான சிறப்புத்தூதுவர் கூறியிருக்கும் கருத்துக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்ரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது. இந்த ஐநாவின் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இருக்கும் அகதிகளுக்கான செயற்பாட்டாளரான பால விக்னேஸ்வரனின் செவ்வி;
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி நீதிமன்றம் ஒன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது குறித்த செய்தி;
சீனாவின் ‘’ஒரு குழந்தைக் கொள்கை’’யில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், பிறக்கப் போகும் தமது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையை பெறவும் அமெரிக்காவுக்கு குழந்தைகளை பிரசவிக்கச் செல்லும் சீனப் பெண்களின் ‘’பிரசவச் சுற்றுலா’’ பற்றி பிபிசி செய்த ஆய்வு குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
