மார்ச் 11 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-03-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் செவ்வி;
இலங்கை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முறையாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறி வவுனியாவில் இன்று நடந்த பேரணி குறித்த செய்திகள்;
இந்தியாவில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள்;
ஆகியவற்றைக் கேட்கலாம்.
முறைகேடாக ஊழல் செய்து சொத்துக் குவித்தார் என்று கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் மீதான தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று முடிவுக்கு வந்திருப்பது குறித்த செய்தி;
ஈஎஸ்ஐ எனப்படும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தமிழ்நாட்டில் நடத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நிபந்தனைகளுடன் ஏற்று நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி; இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கோ மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
வங்கதேசத்தில் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட வலைப்பூ எழுத்தாளர் அவிஜித் ராய்யின் மனைவி ராஃபிதா போன்யா அகமது, பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மதச்சார்பின்மைக்காவும் அறிவியலுக்காகவும் தான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
