'தமிழர் விவகாரத்தில் இருந்து இந்தியா விலகிச் செல்ல முடியாது'

Mar 14, 2015, 01:14 PM

Subscribe

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் நிலையில், அந்த விஜயத்தின் சாதக, பாதகங்கள் குறித்து பல தரப்பாலும் அலசப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையின் தீர்வுக்கானது என்று சொல்லப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான 28 வருட காலத்துக்கு பின்னர், இலங்கையில் ஒரு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் முன்னைய அரசாங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒருவகையான முரண்போக்கு காணப்பட்டு, அந்த அரசாங்கம் பதவியில் இருந்து அகன்ற பின்னர் நடக்கும் ஒரு இந்திய பிரதமரின் இலங்கைக்கான இந்த விஜயம் முக்கியத்துவம் மிக்கதாக அவதானிகளால் பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த விஜயம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து இலங்கையின் தினக்குரல் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு முழுமையாகக் கேட்கலாம்.