மார்ச் 18 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 18, 2015, 06:33 PM

Subscribe

இன்றைய (18-03-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு கடந்த ஆட்சியில் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்ற ஜனாதிபதி மைத்ரிபால உத்தரவிட்டிருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்;

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்று கடற்படை அதிகாரிகள் இன்று கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது குறித்த செய்தி;

வடஇலங்கையில் 5500 வீடுகள் கட்டுவதாக சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் அறிவித்திருப்பது குறித்த செய்தி;

தமிழ்நாட்டில் உடன்குடி என்ற இடத்தில் அமையவிருக்கும் அனல் மின் நிலையத் திட்டத்தை துவக்குவதில் இருக்கும் தாமதம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருக்கும் நிலையில் அது குறித்த ஒரு ஆய்வு;

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த வார இறுதியில் 74 வயது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்திருப்பது குறித்த செய்திகள்;

சிறுவயதில் அதிக அளவுக்கு ஓடி ஆடாமல் இருக்கும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் அவர்கள் வளரும்போது பாதிக்கப்படும் என்று ஆய்வின் முடிவு ஒன்று எச்சரித்திருப்பது குறித்த செய்தி; இன்றைய பலகணியில், ஸ்ரெப்ரெனிட்சாவில் நடந்த ஒட்டுமொத்த மனிதப் படுகொலைகள் குறித்து முதல் தடவையாக செர்பிய அரசாங்க சட்ட அதிகாரிகள் 7 பேரை கைது செய்துள்ள பின்ன்னியில் இதுகுறித்த பின்னணியை விளக்கும் பிபிசியின் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.