மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியிலிருந்து நழுவுகிறாரா?
Share
Subscribe
நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், அந்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்வதாக அரசியல் அவதானிகள் விமர்சித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு சொல்லுகின்ற அமைச்சரவை ஆட்சிமுறையை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்த மைத்திரிபால சிறிசேன, வெற்றிபெற்ற பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டதாக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கமுடியாது என்று பிரசாரம் செய்துவந்த சுதந்திரக் கட்சியின் தலைவராக மாறியிருப்பதே அவரது தயக்கங்களுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் வித்தியாதரன் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமியுடன் நடத்திய ஆய்வுக் கலந்துரையாடலை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
