ஏப்ரல் 6 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 06, 2015, 05:10 PM

Subscribe

இன்றைய (06-04-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியை கோருவது ஏன் என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட மயூரன் சுகுமாறன் உள்ளிட்ட இரு ஆஸ்திரேலியர்களின் மேன்முறையீட்டை இந்தோனேசிய நிர்வாக நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிடப் போவதாக கூறும் அவர்களின் வழக்கறிஞரின் பிரத்யேகச் செவ்வி;

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்ட மூலத்தில் இலங்கையின் தேசிய ஐக்கிய சின்னமாக ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாதென உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக சந்தேககிக்கப்பட்ட சிறுமி சரண்யாவின் புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற உத்தரவுப்படி 38 நாட்களின் பின் இன்று தோண்டி எடுக்கப்பட்டு மீள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்த செய்தி;

காணாமல்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கல்முனையில் துவங்கியுள்ள நிலையில் ஒரு சாரார் அதை புறக்கணித்துள்ளது குறித்த செய்தி;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.