ரிச்சி பெனோ:வார்த்தைகளைக் கடந்த வர்ணனை
Share
Subscribe
கிரிக்கெட் விளையாட்டின் முழுமையான ஆல் ரவுண்டர், பல்துறை வித்தகர் என்றால் அது ரிச்சி பெனோவாகத்தான் இருக்க முடியும்.
அவர் ஆடவும் செய்தார், பேசவும் செய்தார், இரண்டிலும் ரசிகர்களை வசீகரிக்கவும் செய்தார்.
விளையாட்டும் வர்ணனையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதற்கு ரிச்சி பெனோவைத் தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஆட்டம், ஆடுகள அறிவு, நகைச்சுவை இவை மூன்றும் சேர்ந்த ஒரு அபூர்வக் கலவை ரிச்சி பெனோ. கிரிக்கெட் உலகில் ரிச்சி பெனோ தனித்துவமான ஒரு நபராக நிகழ்ந்தார் என்கிறார் அவரை பல சந்தர்பங்களில் சந்தித்துள்ள, ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகையின் ஆசிரியர் நிர்மல் சேகர்.
