ஏப்ரல் 13 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 13, 2015, 05:16 PM

Subscribe

இன்றைய (13-04-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கைக்கு அண்மையில் பயணமாகியிருந்த ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி பாப்லோ டி கிரீப் அளித்திருக்கும் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;

ஆந்திர வனப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேரில் பலர் பேருந்துகளில் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் டில்லிக்கு சென்று நேரில் சாட்சியளித்திருப்பவர்கள் என்ன கோரியிருக்கிறார்கள் என்பது குறித்து ஆணைய உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற நீதிபதி டி.முருகேசனின் பிரத்யேக பேட்டி;

திராவிடர் கழகம் நாளை நடத்தவிருந்த தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டுக்கறி விருந்து ஆகியவற்றுக்கு தமிழக காவல்துறை விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கும் நிலையில், தாலிகட்டும் சடங்கை எதிர்க்கும் தாலி அகற்றுதலும் சடங்காகிவிட்டதா என்பது குறித்து திகவின் கருத்துக்கள்

இன்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சாட்சியமளித்தவர்களை டில்லிக்கு அழைத்துச் சென்ற பீப்பிள்ஸ்வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், இவர்கள் ஆந்திர காவல்துறையிடம் இருந்து தப்பி தம்மிடம் வந்த பின்னணி குறித்து பிபிசி தமிழோசையிடம் விவரிக்கும் செவ்வி;

இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் நியமனச் சட்டம் இன்று திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறித்த செய்தி;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.