ஏப்ரல் 15 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-04-2015) பிபிசி தமிழோசையில்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றியமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை, இந்திய உச்சநீதிமன்றம் வேறு அமர்வுக்கு மாற்றியமைத்து உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளது குறித்த விவாதம்;
இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கான விசா நடைமுறைகளில் நேற்று முதல் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
