இன்றைய ( ஏப்ரல் 16) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தென்னாப்ரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக வன்செயல்கள் சமீப நாட்களில் நடந்த பின்னணியில், டர்பன் நகரில் இதற்கெதிராக நடந்த பேரணியில் நடந்த வன்முறை பற்றிய ஒரு பேட்டி ஒலி
ஆஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி வரும் அகதிகளில் விருப்பமுள்ளவர்களை கம்போடியாவுக்கு அனுப்ப , ஆஸ்திரேலியாவும் கம்போடியாவும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் எழுப்பியிருக்கும் சர்ச்சை பற்றிய ஒரு செய்திக்குறிப்பு
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டச்சென்று போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் ஒருவரது உடல் மீது மறு பிரேதப் பரிசோதனை செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் சமூக இணக்கத்தை உருவாக்க ஜனாதிபதி செயலணிக்கு தகவல்களைத் தர தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளில் குழுக்களை அமைத்து விவரங்களை திரட்டித் தர முடிவெடுத்திருப்பது பற்றிய செய்தி
ஆகியவை கேட்கலாம்
