ஏப்ரல் 19 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (19-04-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை அரசியல்யாப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை நாளை மறுதினம் பின்போட இலங்கையின் இருபெரும் கட்சிகள் இணங்கியுள்ளது குறித்த செய்திகள்;
இந்த சட்டத்திருத்தத்தின் சில பகுதிகளை எதிர்க்கப் போவதாக இலங்கையின் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள் ஒன்றுகூடி அறிவித்திருப்பது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் செவ்வி;
இலங்கையில் சிறு தோட்ட விவசாயிகளிடம் இருந்து தேயிலையை கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலையை இலங்கை அரசாங்கம் அதிகரித்துள்ளது குறித்து கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குனரான பி. சிவப்பிரகாசத்தின் செவ்வி;
இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன், ஊழல் செய்ததற்கான சாட்சியங்கள் இல்லை என்று இது குறித்து விசாரித்த குழு தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்து பிறகு இந்தியாவில் குடியேறிய வரதராஜபெருமாள் தற்போது இலங்கையின் வடபகுதிக்கு சென்று தற்போதைய வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனை சந்தித்து பேசியிருப்பது குறித்து அவரது செவ்வி
நிறைவாக பொலிவிழக்கும் பொன்னிநதி தொடரின் ஆறாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.
