மே 3 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 03, 2015, 05:03 PM

Subscribe

இன்றைய (03-05-2015) பிபிசி தமிழோசையில் இலங்கை சென்ற அமெரிக்க இராஜாங்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரிக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்த செய்திகள்;

ஏழாயிரம் பேருக்கும் அதிகமானவர்களின் உயிர்களை பலிவாங்கிய நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் மீது நேபாள சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்கள் குறித்த செய்திகள்;

பிபிசி உலக சேவையின் மூத்த மொழிபிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தொடங்கி இன்றோடு 74 ஆண்டுகள் முடிந்து, 75வது ஆண்டு தொடங்குவது குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.