மே 11 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-05-2015) பிபிசி தமிழோசையில்
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக கீழ்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டாளிகளையும் வழக்கில் இருந்து விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்த தீர்ப்பை ஆளும் அதிமுகவினர் கொண்டாட்டத்துடன் வரவேற்றிருப்பது குறித்த செய்திகள்;
இன்றைய தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள்;
மற்றும் ஊழல் ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களின் கருத்துக்கள்;
ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு நேரில் ஆஜரானது குறித்த செய்திகள்;
இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் இடம் மாற்றப்பட்டுள்ள உத்தரவை நீக்கி, அவரைத் தொடர்ந்தும் செட்டிகுளம் பகுதியிலேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றுகோரி, அந்தப் பிரதேசத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
