'போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது'- இரா சம்பந்தன்

May 14, 2015, 01:58 PM

Subscribe

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 19ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்த்தை நிறுத்தி, புதிய அரசு , அதை நாட்டைப் பிரிவினைவாத்த்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்ற்ன. தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப் படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பை சாதகமானதாகப் பார்க்கிறார். ஆனால் இன்னும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.