மே 17 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-05-2015) பிபிசியின் தமிழோசையில்,
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமை நீதிக்கு விழுந்த அடி என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு விமர்சித்துள்ளது குறித்த செய்திகள்;
இதுகுறித்து இலங்கை அரசின் கருத்துக்கள்;
இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில், தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாக கூறும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அவர்களின் பிரத்யேக செவ்வி;
இலங்கையின் இறுதிப்போர்க்களமான முள்ளிவாய்க்காலில் நாளை தமிழ்க்கட்சிகளும், தமிழ் அமைப்புக்களும் நடத்த திட்டமிட்டிருந்த நினைவுகூறும் நிகழ்ச்சிகளின் நிலைமை என்ன என்பதை விளக்கும் செய்திக்குறிப்பு;
இலங்கையின் இறுதிப்போர்க்களமான முள்ளிவாய்க்காலின் இன்றைய நிலைமை என்ன என்பதை ஆராயும் பெட்டகம்
சென்னையின் ஆர்.கே.நகர்ப்பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி. வெற்றிவேல் இன்று திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுஆகியவற்றைக் கேட்கலாம்.
