'இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக உள்ளோம்': அருட்தந்தை இமானுவேல்
May 17, 2015, 07:27 PM
Share
Subscribe
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
