மே 18 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-05-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கைபோர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலில் முதல்முறையாக இன்று வடமாகாண முதல்வர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பது குறித்த செய்திகள் ஒலி
அதேவேளை இலங்கையின் கிழக்கே பாதுகாப்புத்துறையினர் அஞ்சலி செலுத்த முயன்ற மாணவர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பு படையினர் அச்சுறுத்தியதாக வெளியாகியுள்ள புகார்கள் ஒலி] இலங்கை நிதி அமைச்சர் ரவி கருனானாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நப்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்
இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் காட்டும் ஆர்வத்தை முழுயுத்தத்திலும் பலியாகிய போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் காட்ட வேண்டும் என்று யாழ் பல்கலைகழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து அந்த சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், இரசாயனவியல் விரிஉரையாளருமான என் சிவபாலனின் செவ்வி;
மிகக்கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மும்பையைச் சேர்ந்த செவிலி அருணா ஷான்பாக், 42 ஆண்டுகள் செயலிழந்த கோமா நிலையில் இருந்தவர், இன்று உயிரிழந்திருப்பது குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
