மே 20 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (20-05-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் வடக்கே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நாளாக கடையடைப்பும் வன்முறையும் நடந்திருப்பது குறித்த செய்திகள்;
மாணவி வித்யாவின் மரணத்தை ஒட்டி யாழ்ப்பாணத்தில் இதுவரை காணாத மிகவும் கோபமான எதிர்வினைகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளரும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் சரோஜா சிவச்சந்திரனின் பேட்டி;
சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் நிலத்தை எடுத்து தொசிற்சாலைக்கு கொடுக்கும் முந்தைய ஆட்சியின் முடிவை ரத்து செய்து தற்போதைய ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிமன்றம் விதித்திருந்த முந்தைய தடையை இன்று நீக்கியிருப்பது குறித்த செய்தி;
இலங்கை அதிபர் மைத்றிபால சிறிசேனா இன்று புதன்கிழமை நாட்டின் முக்கிய ஊடகத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களை சந்தித்து பேசியிருக்கிறார். இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி என்ன விஷயங்களை தெரிவித்தார் என்று தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கத்தின் பேட்டி;
நிறைவாக இன்றைய பலகணியில், சட்டத் தடைகளையும் சமூக சிக்கல்களையும் மீறி தனது மகனுக்கு ஆண் துணை தேடும் மும்பையில் வசிக்கும் தாயின் செயல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
