மே 24 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 24, 2015, 05:26 PM

இன்றைய (24-05-2015) பிபிசி தமிழோசை

இலங்கையின் வடக்கே பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு கொழும்பில் இன்று நடந்த கவன ஈர்ப்பு நடவடிக்கை குறித்த செய்தி;

மாணவியின் படுகொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபருக்கு உதவியதாக சிலரால் புகார் கூறப்படும் வி டி தமிழ்மாறன் தன் மிதான குற்றச்சாட்டுக்கள் குறித்து அளிக்கும் பதில்கள்;

இலங்கையின் வடக்கே சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்திருப்ப குறித்த செய்தி;

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேச மக்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமது சொந்த நிலங்களைச் சென்று தற்போது பார்வையிட்டு வருவது குறித்த செய்தி;

சென்னைக்கு அருகே இருக்கும் குடியம் குகைகளில் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததாகக் கூறும் ஆவணப்படம் ஒன்று கேன்ஸ் திரைப்பவிழாவில் காண்பிக்கப்பட்ட நிலையில் அதன் இயக்குநரின் செவ்வி;

தாய்லாந்துடனான மலேஷிய எல்லைப்பகுதியில் மனிதக்கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட முகாம்களுக்கு அருகே பெருமளவு மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்திருக்கும் மலேஷிய அதிகாரிகள், இந்த புதைகுழிகளில் ரோஹிஞ்சா முஸ்லீம்களின் சடலங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படும் சூழலில் ரோஹிஞ்சா முஸ்லீம் குடியேறிகள் தொடர்பாக ஆசிய பிராந்திய நாடுகளின் நிலைப்பாடு குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு ஆகியவற்றைக் கேட்கலாம்