மே 25 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 25, 2015, 05:24 PM

இன்றைய (25-05-2015) பிபிசி தமிழோசையில்

மலேஷியாவில் தஞ்சம் கோரிச்சென்ற ரோஹிஞ்சா முஸ்லீம்கள் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கருதப்படும் 139 புதைகுழிகள் அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

பிரான்ஸில் குடியேறும் ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்வை அடிப்படையாக கொண்ட தீபன் திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவின் அதிமுக்கிய விருதான பாம்தோர் விருதை வென்றிருக்கும் பின்னணியில் அதில் நடித்த ஷோபா சக்தி மற்றும் காளீஸ்வரி இருவரின் பிரத்யேக பேட்டிகள்;

புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்குப்பிறகு நீதிமன்றத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகள் ஆஜராக மறுப்பது சரியா என்பது குறித்து இலங்கையின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான சீ.வீ. விவேகானந்தனின் விரிவான செவ்வி;

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்பு தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்க அந்த பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குனவர்த்தன தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக திமுக அறிவித்துள்ளது குறித்த செய்தி;

இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி, ஆளும் பாஜகவும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.