மே 27 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 27, 2015, 04:54 PM

Subscribe

இன்றைய (27-05-2015) பிபிசி தமிழோசையில்

சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே கிளிநொச்சிபரந்தன் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

யாழ்குடா பிராந்தியத்துக்கான குடிநீர்த் தேவைக்காக முன்னெடுக்கப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் மருதங்கேணி மீனவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று கூறும் அதிகாரிகளின் விளக்கங்கள்;

இலங்கைத் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது குறித்த செய்தி;

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சென்னை ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக திமுக அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவில் வெய்யிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.