ஜூன் 1 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-06-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை பிரதமர் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று அவரது பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்புவழக்கில் அவரை விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய கர்நாடக மாநில அரசு முடிவெடுத்திருப்பது குறித்த செய்தி;
இலங்கைக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்து விநியோகம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டவிரோதப்பொருள் பாவனை மட்டுப்படுத்தப்படுமா என்பது குறித்து இலங்கையில் இயங்கிவரும் மதுபானம் மற்றும் போதைப்பொருள்கள் குறித்த தகவல் நிலையத்தின் செயற்திட்ட அதிகாரியான தினேஷின் செவ்வி;
இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அனைத்து விதமான வன்முறைகளை கண்டித்தும், இது தொடர்பான வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கக்கோரியும் இலங்கை முழுவதும் நாடுதழுவிய அளவில் நடந்திருக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி;
புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வு கொலைச் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து அவரையும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது குறித்த செய்தி
விளையாட்டரங்கத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான தினத்தையொட்டி புகைபிடிப்பது விளையாட்டு வீரர்களை எப்படி பாதிக்கும் என்பது குறித்த கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
