ஜூன் 3 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (03-06-2015) பிபிசி தமிழோசையில்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இலங்கைக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் குறித்து சர்வதேச ஊடக அமைப்புக்களின் விசாரணை தேவை என்று யாழ் ஊடக மையம் கோரியிருப்பது குறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினம் தயாபரனின் செவ்வி;
தமிழ் முற்போக்கு கூட்டணி என்னும் பெயரில் புதிய கூட்டணி உருவாகியிருப்பது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் செவ்வி;
இலங்கை அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தின்கீழ் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் அமைப்புசபைக்கான உறுப்பினர்கள் நியமனம் குறித்த விசேட நாடாளுமன்ற கூட்டம் சர்ச்சையில் முடிந்திருப்பது குறித்த செய்தி; மட்டக்களப்பு வாகறையில் தமது காணிகளை மீண்டும் தம்மிடம் கையளிக்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி;
வவுனியா மாவட்டத்தில் உள்ள ரயில்பாதை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருப்பது குறித்த செய்தி;
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா போட்டியிடும் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக இடதுசாரிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி;
ஃபிஃபாவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் நேற்று அறிவித்த பிறகு உலக கால்பந்தாட்ட நிர்வாக கட்டமைப்பு குறித்து மேலதிகமாக விசாரிக்கப்படவேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
