ஜூன் 8 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-06-2015) பிபிசி தமிழோசையில்
துருக்கியில் நடந்துமுடிந்திருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் 13 ஆண்டுகாலம் ஆண்ட எர்துவான் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்து என்ன என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
தமிழ் சிவில் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் நீதிகேட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையில் கிழக்கிலங்கையில் நடந்திருக்கும் பேரணி குறித்த செய்திகள்;
இலங்கையின் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறையில் கைதானவர்களில் இந்தியர் உள்ளிட்ட 34 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு தடை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது குறித்த செய்தி;
இந்தியாவில் பள்ளிகள் மட்டத்தில் யோகாபயிற்சிகளை ஊக்குவிக்க மத்திய அரசு முன்னெடுக்கும் முயற்சிகள், நாட்டின் மதசிறுபான்மையினர் மத்தியில் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ள சர்ச்சையின் பின்னணி குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கத்தில் ஆசிய தடகள போட்டிகளில் இந்தியா அதிகப் பதக்கம் வெல்லாதது ஏன் என்பதை அலசும் செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
