ஜூன் 10 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 10, 2015, 04:51 PM

Subscribe

இன்றைய (10-06-2015) பிபிசி தமிழோசையில்

இந்திய இராணுவத்தினர் பர்மாவுக்குள் ஊடுறுவிச்சென்று தாக்குதல் நடத்தி தீவிரவாதக்குழிவினர் சிலரைக் கொன்றிருப்பதாக இந்திய அமைச்சர் அறிவித்திருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இந்தியாவின் அமலாக்கத் துறையால் தங்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதற்குத் தடைகோரி சன் டிவி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைமுறையை மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் சாசனத்தின் 20ஆவது சட்டத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாட்டில் குழப்பம் நிலவுவதாக கூறப்படுவது குறித்து அந்த கட்சியின் கருத்துக்கள்

பாகிஸ்தானில் கொலைக்குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்த அந்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்தி;

13 வயது சிறுமியாக இருந்தபோது அகற்றப்பட்டு, 10 ஆண்டுகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த கருவகத்தின் திசுக்களைக் கொண்டு பெல்ஜியத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றிருப்பது, நோய்களால் பாதிக்கப்பட்டு, கருவளத்தை இழந்துள்ள ஆயிரக் கணக்கான பெண்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும் என்று நம்பிக்கையை உருவாக்கியிருப்பது குறித்த செய்தி;

நிறைவாக பலகணியில் ஆப்ரிக்காவிலிரிருந்து ஐரோப்பாவுக்கு வரும் குடியேறிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த பிபிசியின் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.