ஜூன் 13 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 16, 2015, 05:44 PM

Subscribe

இன்றைய (16-06-2015) பிபிசி தமிழோசையில்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருப்பதற்கு அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் 20 ஆவது அரசியல் சட்டத்திருதத்தை ஆட்சியில் பங்குபெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலியின் செவ்வி;

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் இயங்கி வரும் மகேஸ்வரி அறக்கட்டளைக்கு எதிராக இன்று ஊழல் ஒழிப்பு செயலகத்திடம் புகாரொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

இலங்கை கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் மாற்றப்பட்டிருப்பது குறித்த செய்தி;

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் லலித் மோடிக்கு பயண ஆவணங்களை பெறுவதற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் தனக்கும், தன்னைப்போன்ற மற்ற கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கும் அதேபோன்ற உதவியைச் செய்யும்படி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் சுஷ்மா சுவராஜ்ஜுக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து உதயகுமாரின் பிரத்யேக செவ்வி;

நிறைவாக அனைவர்க்கும் அறிவியல் ஆகியவற்றைக் கேட்கலாம்.