ஜூன் 22 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 22, 2015, 04:39 PM

Subscribe

இன்றைய (22-06-2015) பிபிசி தமிழோசையில்

டில்லியில் நடைபெற்ற முதல் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணை ஜனாதிபதி கலந்துகொள்ளாதது குறித்து பாஜக தலைவர் ராம் மாதவ் செய்த விமர்சனம் தொடர்பான சர்ச்சை குறித்த செய்திகள்;

இலங்கையின் யாழ்ப்பாணத்தின் குடிநீர்த்தேவைக்காக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படுமென அமைச்சர் ரவ்ப் ஹக்கீம் செய்திருக்கும் அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று பத்திரிகையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டிருக்கும் விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தை எட்டியிருப்பது குறித்த செய்திகள்;

மலேஷியாவில் திருநங்கைகளுக்கு எதிரான சட்டம் ரத்துசெய்யப் படவேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் விடுத்திருக்கும் பின்னணியில் இந்தச் சட்டத்தின் பின்புலம் மற்றும் தாக்கம் குறித்து மலேசிய எதிர்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரனின் செவ்வி;

தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா போட்டியிடும் ஆர் கே நகர் தொகுதியில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியிருப்பது குறித்த செய்தி;

விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.