ஜூன் 24 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 24, 2015, 06:04 PM

Subscribe

இன்றைய (24-06-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியுள்ளது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் செவ்வி;

இதற்கிடையே, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இலங்கையின் கிழக்கே சுதந்திர வர்த்தக வலையம் ஒன்று புதிதாக அமைக்கப்படப்போவதாக வீடமைப்பு துறை துணை அமைச்சரான எம். எஸ். அமீர் அலி தெரிவித்திருப்பது தொடர்பில் அவரது பிரத்யேக செவ்வி;

இலங்கையின் கிழக்கே சுதந்திர வர்த்தக வலையம் ஒன்று புதிதாக அமைக்கப்படுவது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டில் சிறுமியாக இருந்தபோது பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டு குழந்தைப் பெற்ற பெண்ணை, அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருடன் இணக்கப்பாடு காண முடியுமா என்று கண்டறியுமாறு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது சரியா என்பது குறித்து மக்கள் சிவில் உரிமைகள் அமைப்பின் சுதா ராமலிங்கத்தின் செவ்வி;

இந்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி மீதான வழக்கை டில்லியில் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது குறித்த செய்தி; பாகிஸ்தானின் "எம்க்யூஎம் கட்சிக்கு இந்தியா நிதியுதவி" செய்ததா என்பதை ஆராயும் பிபிசியின் ஓவென் பென்னட் ஜோன்ஸின் புலனாய்வுச் செய்தி;

பிரான்சின் Caley துறைமுகத்திலிருந்து பிரிட்டன் வந்த லாரிகளில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஏற முயன்றதை அடுத்து, பிரிட்டிஷ் பிரஞ்சு எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.