ஜூலை 1, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளது குறித்த செய்தி, இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு தொடர்பில் உரசல்கள் வந்துள்ள தகவல்கள் தொடர்பாக ஒரு செய்தி, தமிழகத்தில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழுந்திருக்கும் கருத்துக்கள், கிரேக்கத்தில் ஏற்பட்டிருக்கும் கடன் நெருக்கடி குறித்து ஒரு பார்வை ஆகியவற்றைக் கேட்கலாம்.
