ஜூலை 3 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (03-07-2015) லண்டன் பிபிசி தமிழோசையில்,
இலங்கையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுஷில் பிரேம ஜெயந்த் அறிவித்திருப்பது குறித்த செய்தி;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட அவகாசம் பெற்றுக்கொடுக்க கூடாதென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் நடைபெற்றிருப்பது குறித்த செய்தி;
மஹிந்தவுக்கு தன் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதை சந்திரிகா எதிர்ப்பார் என்றும் இது தேர்தலில் ரணிலுக்கு சாதமாகலாம் என்றும் கூறும் சிலோன்டுடே பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியர் ஆனந்த பாலகிருட்ணரின் ஆய்வுக்கண்ணோட்டம்;
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராளிக் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பது ஏன் என்பது குறித்து, அவர்களின் சார்பாக பேசும் ஊடகவியலாளர் வித்யாதரனின் செவ்வி;
முல்லை பெரியாறு அணை மீது தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என்கிற எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அதற்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது குறித்த செய்தி;
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறார்கள் குறித்து இந்திய அரசும் ஐநா மன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யூனிசெஃப் அமைப்பும் சேர்ந்து செய்த விரிவானதொரு கணக்கெடுப்பின் விவரங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநில ஆட்சி குறித்து எதிர்மறையான புள்ளிவிவரங்கள் கொண்டிருப்பதால் தான் இதுவரை வெளியிடப்படவில்லையா என்பதை ஆராயும் பிபிசியின் புலனாய்வுச் செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
