ஜூலை 6 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (06-07-2015) பிபிசியின் தமிழோசையில்
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வவுனியா கூட்டம் குறித்த செய்திகள்;
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உருவாக்கியிருக்கும் ஜனாநாயக போராளிகள் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையின் கிழக்கே காத்தான்குடி அருங்காட்சியகத்திலுள்ள உருவச்சிலைகள் மற்றும் பொம்மைகளை அகற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கூறியிருப்பதைத் தொடர்ந்து அந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருப்பது குறித்த செய்தி;
தனது வீட்டுப்பணிப் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியை கைது செய்யும்படி கோரி கொழும்பில் நடந்த போராட்டம் குறித்த செய்தி;
இந்தியாவில் திருமணமாகாத பெண் ஒருவர் தன் குழந்தையின் தந்தையின் பெயரை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செய்தி;
சர்வதேச நிதி மீட்பு தொடர்பான நிபந்தனைகளை நிராகரிப்பதாக கிரேக்கம் மிகப்பெரிய அளவில் வாக்களித்து நிராகரித்துள்ள நிலையில் அடுத்து கிரேக்கம் மற்றும் யூரோவலையத்தின் எதிர்காலம் பற்றி பிபிசியின் கெவின் ஹெவிட்டின் ஆய்வுக்கண்ணோட்டம்;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
