ஜூலை 8 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-07-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன எந்த முன் நிபந்தனையும் விதிக்கவில்லை என்று அவரது அதரவாளர்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
மலையகப்பகுதியில் தொடரும் தொழிலாளர் போராட்டம் காரணமாக 23 தேயிலை தொழிற்சாலைகள் தயாரிப்புப் பணியை நிறுத்தியிருப்பது குறித்த செய்திகள்;
பணிப்பெண்ணை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ருவுக்கு பிணை வழங்கும்போது, கல்கிசை மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஆப்ருவுக்கு சாதகமாகச் செயல்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடமொன்றில் நான்கு மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்;
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஊழல் வழக்கு தொடர்பாக தான் பதவி விலக முடியாது என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்திருப்பது செய்தி;
இந்தியாவில் கர்பிணிப்பெண்கள் திறந்த வெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துவதனால் அவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பது குறித்த செய்தி;
சமீபத்தில் விபத்துக்குள்ளான நடிகை ஹேம மாலினி இந்தியாவில் பரபரப்புக்காக செய்திகளை தேடும் ஊடகங்களும் சில பொதுமக்களும் தன் மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்பியுள்ளதாக குறைகூறியுள்ளஹு குறித்த செய்தி;
ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும், வயதாகும் வேகம் என்பது நபருக்கு நபர் மாறுபடுவதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பது குறித்த செய்தி இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடமொன்றில் நான்கு மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
